The Lord is not slack concerning his promise, as some men count slackness; but is longsuffering to us-ward, not willing that any should perish, but that all should come to repentance.
பின்பு அவர் என்னைத் தேவாலயத்திற்கு அழைத்துக்கொண்டுபோய், தூணாதாரங்களை இந்தப்புறத்தில் ஆறுமுழ அகலமும் அந்தப்புறத்தில் ஆறுமுழ அகலமுமாக அளந்தார்; அது வாசஸ்தலத்தின் அகல அளவாம்.
வாசல் நடையின் அகலம் பத்து முழமும் வாசல் நடையின் பக்கங்கள் இந்தப்புறத்தில் ஐந்து முழமும் அந்தப்புறத்தில் ஐந்து முழமுமாயிருந்தது; அதின் நீளத்தை நாற்பது முழமும் அகலத்தை இருபது முழமுமாக அளந்தார்.
பின்பு அவர் உள்ளே போய், வாசல் நடையின் தூணாதாரங்களை இரண்டு முழமாகவும், வாசல் நடையை ஆறுமுழமாகவும், வாசல் நடையின் அகலத்தை ஏழுமுழமாகவும் அளந்தார்.
பின்பு அவர் தேவாலயத்தின் முன்புறத்திலே அதின் நீளத்தை இருபது முழமாகவும், அதின் அகலத்தை இருபது முழமாகவும் அளந்து, என்னை நோக்கி: இது மகா பரிசுத்த ஸ்தலம் என்றார்.
பின்பு அவர் ஆலயத்தின் சுவரை ஆறு முழமாகவும், ஆலயத்தைச் சுற்றிலும் இருந்த சுற்றுக்கட்டினுடைய அகலத்தை நாலுமுழமாகவும் அளந்தார்.
இந்தச் சுற்றுக்கட்டுகள் பக்கக்கட்டின்மேல் பக்கக்கட்டான வரிசைகளாய் முப்பத்துமூன்று இருந்தது; அவைகள் ஆலயத்தின் சுவருக்குள் ஊன்றியிராமல், சுற்றுக்கட்டுகளுக்காகச் சுற்றிலும் அவைகள் ஊன்றும்படிக்கு ஆலயத்துக்கு அடுத்திருந்த ஒட்டுச்சுவரிலே பாய்ந்திருந்தது.
உயர உயரச் சுற்றிலும் சுற்றுக்கட்டுகளுக்கு அகலம் அதிகமாயிருந்தது; ஆலயத்தைச் சுற்றிலும் உயர உயர ஆலயத்தைச் சுற்றிச் சுற்றி அகலம் வரவர அதிகமாயிருந்தது; ஆதலால் இவ்விதமாய்க் கீழ்நிலையிலிருந்து நடுநிலைவழியாய் மேல்நிலைக்கு ஏறும் வழியிருந்தது.
மாளிகைக்குச் சுற்றிலும் இருந்த உயரத்தையும் பார்த்தேன், சுற்றுக்கட்டுகளின் அஸ்திபாரங்கள் ஆறுபெரிய முழங்கொண்ட ஒரு முழக்கோலின் உயரமாயிருந்தது.
புறம்பே சுற்றுக்கட்டுக்கு இருந்த சுவரின் அகலம் ஐந்துமுழமாயிருந்தது; ஆலயத்துக்கு இருக்கும் சுற்றுக்கட்டுகளின் மாளிகையிலே வெறுமையாய் விட்டிருந்த இடங்களும் அப்படியே இருந்தது.
ஆலயத்தைச் சுற்றிலும் அறைவீடுகளுக்கு நடுவாக இருந்த விசாலம் இருபது முழமாயிருந்தது.
சுற்றுக்கட்டினுடைய வாசல்நடைகள், வெறுமையாய் விட்டிருந்த இடங்களிலிருந்து, ஒரு வாசல் நடை வடக்கேயும், ஒரு வாசல்நடை தெற்கேயும் இருந்தது; வெறுமையாய் விட்டிருந்த இடங்களின் விசாலம் சுற்றிலும் ஐந்து முழமாயிருந்தது.
மேற்றிசையிலே பிரத்தியேகமான இடத்துக்கு முன்னிருந்த மாளிகைமட்டும் அகலம் எழுபது முழமும், மாளிகையினுடைய சுவரின் அகலம் சுற்றிலும் ஐந்துமுழமும், அதினுடைய நீளம் தொண்ணூறு முழமுமாயிருந்தது.
அவர் ஆலயத்தை நூறு முழ நீளமாகவும், பிரத்தியேகமான இடத்தையும் மாளிகையையும், அதின் சுவர்களையும் நூறு முழ நீளமாகவும் அளந்தார்.
ஆலயத்தின் முற்புறமும் கிழக்குக்கு எதிரான பிரத்தியேகமான இடமும் இருந்த அகலம் நூறு முழமாயிருந்தது.
பிரத்தியேகமான இடத்தின் பின்புறமாக அதற்கு எதிரே இருந்த மாளிகையின் நீளத்தையும், அதற்கு இந்தப்புறத்திலும் அந்தப்புறத்திலும் இருந்த நடைகாவணங்களையும் அளந்தார்; உள்ளான தேவாலயமும் முற்றத்தின் மண்டபங்களும் உட்பட நூறு முழமாயிருந்தது.
வாசற்படிகளும், ஒடுக்கமான ஜன்னல்களும், மூன்று பக்கங்களில் சுற்றிலும் வாசல்களுக்கு எதிரான நடைகாவணங்களும் சுற்றிலும் தரை துவக்கி ஜன்னல்கள் மட்டாகப் பலகை அடித்திருந்தது; ஜன்னல்கள் மூடப்பட்டிருந்தது.
வாசலின் மேலேதுவக்கி ஆலயத்தின் உட்புறமும் வெளிப்புறமும் சுற்றிலும் சுவரின் உட்புறமும் வெளிப்புறமும் எல்லாம் அளவிட்டிருந்தது.
கேருபீன்களும் பேரீச்சமரங்களும் சித்திரிக்கப்பட்டிருந்தது; கேருபீனுக்கும் கேருபீனுக்கும் நடுவாக ஒவ்வொரு பேரீச்சமரம் இருந்தது; ஒவ்வொரு கேருபீனுக்கும் இரண்டிரண்டு முகங்கள் இருந்தது.
தரை துவக்கி வாசலின் மேற்புறமட்டும், தேவாலயத்தின் சுவரிலும், கேருபீன்களும் பேரீச்சமரங்களும் சித்திரிக்கப்பட்டிருந்தது.
தேவாலயத்தின் கதவு நிலைகள் சதுரமும், பரிசுத்த ஸ்தலத்தினுடைய முகப்பின் உருவம் அந்த உருவத்துக்குச் சரியுமாயிருந்தது.
மரத்தினால் செய்யப்பட்ட பலிபீடத்தின் உயரம் மூன்று முழமும், அதின் நீளம் இரண்டு முழமுமாயிருந்தது; அதின் கோடிகளும் அதின் விளிம்புகளும், அதின் பக்கங்களும் மரத்தினால் செய்யப்பட்டிருந்தது. அவர் என்னை நோக்கி: இது கர்த்தருடைய சந்நிதியிலிருக்கிற பீடம் என்றார்.
தேவாலயத்துக்கும் பரிசுத்த ஸ்தலத்துக்கும் இரண்டு வாசல்களும்,
வாசல்களுக்கு மடக்குக் கதவுகளாகிய இரட்டைக் கதவுகளும் இருந்தது; ஒரு வாசலுக்கு இரண்டு கதவுகளும் மற்ற வாசலுக்கு இரண்டு கதவுகளும் இருந்தது.